×

ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்

சிவகங்கை, செப். 25: சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு டில்லியில் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அறவழியில் போராடும் விவசாயிகள் மீது கண்ணீர்புகை குண்டு வீசுவது, துப்பாக்கியால் சுடுவது உள்ளிட்டவற்றை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்டத் தலைவர் வீரபாண்டி தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகிகள் தண்டியப்பன், கருப்புச்சாமி, சிஐடியூ மாவட்ட செயலாளர் சேதுராமன், மாவட்டத் தலைவர் வீரையா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத்தலைவர் கௌதம், மாவட்ட செயலாளர் சுரேஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கபூபதி மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : union government ,Sivagangai ,Tamil Nadu Farmers' Association ,Sivagangai Palace Gate ,Delhi ,Farmers' Association ,
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...