- மதுரை காந்தி மியூசியம்
- மதுரை
- கஸ்துரி பாகந்தி நினைவு தினம்
- தில்லையாடி வல்லியம்மய் நினைவு நாள்
- காந்தி
- அருங்காட்சியகம்
- கஸ்தூரிபா காந்தி
- தில்லையாடி வல்லியம்மய்
- காந்தி அஷ்டி
- தின மலர்
மதுரை, பிப். 25: மதுரை காந்தி மியூசியத்தில் கஸ்தூரிபாகாந்தி நினைவு நாள் மற்றும் தில்லையாடி வள்ளியம்மை நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கஸ்தூரிபா காந்தி, தில்லையாடி வள்ளியம்மை ஆகியோரின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் காந்தி அஸ்தி பீடத்தில் மலரஞ்சலி செய்யப்பட்டது. இந்நிகழ்விற்கு காந்தி மியூசியத்தின் பொருளாளர் வழக்கறிஞர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
காந்தி மியூசியத்தின் செயலாளர் கே.ஆர்.நந்தாராவ் முன்னிலை வகித்தார். தியாகியும், அப்போதைய ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் முன்னாள் கலெக்டர் லட்சுமிகாந்தன்பாரதில இவர், கஸ்தூரிபாகாந்தி மற்றும் தில்லையாடி வள்ளியம்மை குறித்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் இளைஞர், சுயஉதவிக் குழுவினருக்கு கோடைகால வர்த்தக பொருட்கள் குறித்த கைத்தொழில் பயிற்சி வகுப்பை மியூசியத்தின் கல்வி அலுவலர் நடராஜன் ஒருங்கிணைத்தார்.
தொடர்ந்து மாலையில் நடந்த சிறப்பு சர்வ சமயப் பிரார்த்தனையில் காந்திய சிந்தனை கல்லூரியின் முதல்வர் முத்துலட்சுமி, சுயவேலைவாய்ப்பு பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். கடவூர் செசி, அமைதி சங்க உறுப்பினர்கள், மாணவ-மாணவிகள் சார்பில் காந்தியக் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த கலை நிகழ்ச்சியை அமைதிச் சங்கத் தலைவர் சரவணன் மற்றும் நாடகக்கலை ஆசிரியர் ரவி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியில் காந்திய கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதல்வர் தேவதாஸ், பயிற்றுநர்கள் மகாலட்சுமி ராம்தாஸ், வைரமணி சிவசங்கர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post மதுரை காந்தி மியூசியத்தில் சுயவேலைவாய்ப்பு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல் appeared first on Dinakaran.