×

சின்னமலை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 ஏக்கர் புற்கள் எரிந்து நாசம்

 

காங்கயம், பிப்.25: காங்கயம் தாலூகா, சிவன்மலை அருகே உள்ள சின்னமலை 500 ஏக்கர் பரப்பில் உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இதில் சீமைகருவேல மரங்கள், வேம்பு, பனை மரங்கள் மற்றும் புற்களும் வளர்ந்துள்ளன. அதிகமான புதர்கள் உள்ள இந்த பகுதிகளில் ஏராளமான முயல்களும், மயில் உள்ளிட்ட பறவைகளும் உள்ளன. மேலும், அருகில் உள்ள பொதுமக்களும், விவசாயிகளும் தாங்கள் வளர்க்கும் ஆடு மாடுகளுக்கு மேய்ச்சல் பகுதியாகவும் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று மதியம் இந்த பகுதியில் திடீரென தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. காற்றின் வேகத்தில் புற்களில் பற்றிய தீ வேகமாக பரவி எரிந்தது. அருகில் உள்ள கிராம மக்கள் காங்கயம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அவ்வழியாக, சென்ற நபர் யாரோ பீடி குடித்துவிட்டு அப்பகுதியில் போட்டு சென்றாதல் தீ பற்றியதாக தெரிகிறது. இது குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சின்னமலை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 ஏக்கர் புற்கள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Chinnamalai ,Kangayam ,Sivanmalai ,Kangayam taluka ,Dinakaran ,
× RELATED ஆங்கிலேயர்களுக்குச்...