×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு

 

திருவள்ளூர்: பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், நெமிலிச்சேரி, கருணாகரச்சேரி, அன்னம்பேடு ஊராட்சியில் பல்வேறு அத்தியாவசியப் பணிகளை செயல்படுத்த திமுக ஒன்றிய கவுன்சிலர் கே.சுரேஷ்குமார் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கரிடம் கோரிக்கை மனு அளித்தார். அதன் விவரம் வருமாறு: நெமிலிச்சேரி ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீநாத் நகர் 7வது மெயின் தெருவில் உள்ள 1வது, 2வது குறுக்கு தெருக்கள், 4வது மெயின் தெருவில் உள்ள 1வது, 2வது குறுக்கு தெருக்களில் சிமெண்ட் சாலைகள் அமைத்திட வேண்டும்.

அதேபோல் அன்னம்பேடு ஊராட்சியில் ஆனந்தம் நகர், முத்துமாரியம்மன் கோயில் தெரு, முத்தமிழ் நகர் சிமெண்ட் சாலை மற்றும் மழைநீர் கால்வாய் அமைத்திட வேண்டும். கருணாகரச்சேரி ஊராட்சியில், அமுதூர்மேடு சமுதாய கூடம் சீரமைக்க வேண்டும். ராமாபுரம் சுடுகாட்டிற்கு செல்லும் சாலை அமைத்து மற்றும் பைப் லைன் புதைக்க வேண்டும்.

ஊராட்சி அலுவலகம் சுற்றி கம்பி வேலி அமைக்க வேண்டும். மாரியம்மன் கோயில் தெரு குறுக்குத் தெரு 50 மீட்டர், தந்தை பெரியார் தெரு குறுக்குத் தெரு 71 மீட்டர் சிமெண்ட் சாலை அமைத்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர் கே.சுரேஷ்குமார் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

 

The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,DMK Union ,Councilor ,K. Suresh Kumar ,District Collector ,T. Prabhushankar ,Poontamalli Panchayat Union ,Nemilicherry ,Karunakaracherry ,Annampedu Panchayat ,Srinath ,Nagar ,Nemilicherry Panchayat ,Dinakaran ,
× RELATED தேர்தல் பிரச்சாரத்தில் தேசிய கொடியை...