×

மத்திய மாவட்ட திமுக சார்பில் இன்று பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்: ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ அறிக்கை

 

ஆவடி: திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மத்திய மாவட்டம் சார்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக பாகமுகவர்கள் (BLA 2) மற்றும் வட்ட, கிளை செயலாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணிக்கு, பட்டாபிராம், ஜெயகிரிஷ் மண்டபத்தில் திருவள்ளூர் மத்திய மாவட்ட அவைத் தலைவர் மா.ராஜி தலைமையில் நடைபெறுகிறது.

மேலும் இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஜே.ரமேஷ், மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் சி.ஜெரால்டு, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பிரபு கஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் வி.ஜெ.சீனிவாசன், எஸ்.ஜெயபாலன், காயத்ரி ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் பா.நரேஷ் குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் த.எத்திராஜ், ஜி.ராஜேந்திரன், கு.விமல் வர்ஷன், எம்.முத்தமிழ் செல்வன், வி.குமார், ஜெ.மகாதேவன், காஞ்சனா சுதாகர் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்,

இக்கூட்டத்தில் திமுக தலைவர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளான மார்ச் 1 இளைஞர் எழுச்சி நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது, திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுகூட்டம் நடத்துவது மற்றும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தலைமை அறிவிப்பின்படி ‘இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்’ தலைப்பில் திண்ணை பிரசாரம் மேற்கொள்ளுதல் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், திருவள்ளூர் மத்திய மாவட்ட நிர்வாகிகள், சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள், மாநகர, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், பாகமுகவர்களின் ஒருங்கிணைப்பாளர்கள், பாகமுகவர்கள் (BLA 2), வட்ட, கிளை செயலாளர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இக்கூட்டத்திற்கு முன்னதாக ஆவடி வடக்கு பகுதி செயலாளர் நாராயண பிரசாத் வரவேற்புரை ஆற்றுகிறார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post மத்திய மாவட்ட திமுக சார்பில் இன்று பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்: ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Central District DMK ,Avadi CM Nassar MLA ,Aavadi ,Thiruvallur Central District ,Tiruvallur Central District ,Constituent Agents ,BLA 2 ,Circle ,Dinakaran ,
× RELATED பூந்தமல்லியில் திமுக கூட்டணி...