×

மஞ்சங்காரணை கிராமத்தில் சேதமடைந்த பயணியர் பஸ் நிறுத்தம்: சீரமைக்க மக்கள் கோரிக்கை

 

ஊத்துக்கோட்டை: மஞ்சங்காரணை கிராமத்தில் சேதமடைந்த பயணியர் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை கிராமத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். மஞ்சங்காரணையை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வேலை சம்மந்தமாகவும், பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல மஞ்சங்காரணை பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்து, அங்கிருந்து பெரியபாளையம், திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி, கும்மிடிபூண்டி, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கு பஸ் மூலம் செல்வார்கள்.

அவ்வாறு செல்லும் பயணிகளுக்கு பஸ் நிலையமோ அல்லது பயணியர் நிழற்குடையோ இல்லை. இதனால் பயணிகள் வெட்ட வெளியில் கொளுத்தும் வெயிலிலும், மழைக் காலங்களில் மழையில் நனையும் நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த 2016 – 17ம் ஆண்டு ரூ.5 லட்சம் செலவில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த பயணியர் நிழற்குடையில் உள்ள இரும்பு நாற்காலிகள் உடைந்து சேதமடைந்து அதன் தகடுகள் பயணிகளை பதம் பார்த்தது. பிறகு அந்த இரும்பு நாற்காலிகளையும் காணவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிறுத்தத்தை சீரமைத்து புதிய நாற்காலிகள் அமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post மஞ்சங்காரணை கிராமத்தில் சேதமடைந்த பயணியர் பஸ் நிறுத்தம்: சீரமைக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Manjankaranai ,Oothukottai ,Manchankaranai ,Periyapalayam ,
× RELATED ஆரணி பேரூராட்சி பஜார் பகுதியில்...