×

இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கியின் ஸ்வாவலம்பன் மேளா

சென்னை: நாட்டிலுள்ள லட்சக்கணக்கான சிறு, குறு தொழில்களில் ஈடுபட்டு வரும் தொழில் முனைவோர்களின் கனவுகளை நனவாக்கி, அவர்களின் தொழில் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து ஊக்கம் அளித்து வரும் இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி (SIDBI) “ஸ்வாவலம்பன் மேளா” (சுயசார்புவிழா) என்ற ஒரு புதியதொரு முயற்சியை அறிமுகப்படுத்தி நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக இளைஞர்களை ‘வேலை தேடுபவர்களில்’ இருந்து வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களாக மாற்றும் நோக்கம் கொண்டது. சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் கைவினைகலைஞர்களுக்கு அவர்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும், விற்கவும் சிறந்த ஊன்றுகோலாக இது அமைகிறது.

மேலும் அவர்கள் சுயதொழில் செய்ய உதவுவதோடு மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவும், அதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு சிறந்த வாழ்வாதாரத்தை உருவாக்கவும் உதவுகிறது. இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கியின் சென்னை மண்டல அலுவலகம், 4வது முறையாக ஸ்வாவலம்பன் மேளாவின் கைவினைப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையை நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டத்திற்கு அருகில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடத்துகிறது. மாநிலம் முழுவதிலுமிருந்து 50க்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் கைவினைகலைஞர்கள், பெரும்பாலும் மகளிர் சுய உதவி குழுக்கள் தங்கள் கைவினைப் பொருட்கள் மற்றும் தயாரிப்புகளை கண்காட்சி மற்றும் விற்பனையை இன்று காலை 10 மணி முதல் இரவு 9 மணிவரை செய்ய உள்ளனர், என சென்னை மண்டல அலுவலக பொது மேலாளர் ரவீந்திரன் தெரிவித்தார்.

The post இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கியின் ஸ்வாவலம்பன் மேளா appeared first on Dinakaran.

Tags : Swavalampan Mela ,Small Business Development Bank of India ,CHENNAI ,SIDBI ,Self-Reliance Festival ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...