×

திருமங்கலத்தில் பரபரப்பு குப்பை தொட்டியில் மனித எலும்பு கூடு

அண்ணாநகர்: சென்னை திருமங்கலம் பகுதியில் தனியார் பள்ளி அருகே குப்பை தொட்டி உள்ளது. இதில், நேற்று முன்தினம் இரவு மனித மண்டை ஓடு, கால், தொடை உள்ளிட்ட எலும்பு கூடுகள் சிதறி கிடைப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், திருமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் சிபுக்குமார் தலைமையிலான போலீசார், குப்பை தொட்டியில் கிடைந்த மண்டை ஓடு மற்றும் எலும்பு கூடுகளை பறிமுதல் செய்து நடத்திய விசாரணையில், மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்வதற்காக பயன்படுத்தி விட்டு, அதனை குப்பை தொட்யில் வீசியது தெரியவந்தது. மேலும், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘குப்பை தொட்டியி்ல பறிமுதல் செய்யப்பட்ட மண்டை ஓடு, எலும்பு கூடுகளை மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்ய பயன்படுத்திவிட்டு, குப்பை தொட்டியில் வீசி இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. எனவே, பொதுமக்கள் பீதியடைய வேண்டாம், என்றனர்.

The post திருமங்கலத்தில் பரபரப்பு குப்பை தொட்டியில் மனித எலும்பு கூடு appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Annanagar ,Chennai ,Tirumangalam ,
× RELATED மதுரை திருமங்கலம் அருகே விபத்தில் 4 பேர் பலி