×

ராமநாதபுரத்தில் நவாஸ் கனி மீண்டும் போட்டியிடுகிறார்: திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

சென்னை: திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மீண்டும் ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யபப்ட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்தானது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய காதர் மொய்தீன்; ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நவாஸ் கனியே மீண்டும் போட்டியிடுவார்.

நவாஸ் கனிதான் போட்டியிடுவார் என்பதை பொதுக்குழுவில் அறிவிப்போம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அகில இந்திய கட்சி என்பதால் ஏணி சின்னத்திலேயே போட்டியிடுவோம் இவ்வாறு கூறினார். கடந்த முறை திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டது. கடந்த முறை போட்டியிட்டு வென்ற ராமநாதபுரம் தொகுதியிலேயே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது.

The post ராமநாதபுரத்தில் நவாஸ் கனி மீண்டும் போட்டியிடுகிறார்: திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Nawaz Ghani ,Ramanathapuram ,Indian Union Muslim League party ,Dimuka ,Chennai ,Dhawar Mu. K. Stalin ,Union Muslim League party of India ,Kadar Moedin ,Nawaz Kani ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரத்தில் விமான நிலையம் நவாஸ்கனி எம்பி தேர்தல் அறிக்கை வெளியீடு