×

பிர­த­ம­ரை தேர்ந்­தெ­டுக்­கும் தேர்­தல்தான் என அலட்­சி­ய­மாக இருக்க கூடாது; தமிழ்­நாட்­டின் உரி­மை­களை மீட்க, இந்­தியாவை காப்­பாற்­று­வ­தற்­கான முக்­கி­ய­மான தேர்­தல்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: பிர­த­ம­ரை தேர்ந்­தெ­டுக்­கி­ன்ற தேர்­தல் என்று அலட்­சி­ய­மாக இருக்க கூடாது. தமிழ்­நாட்­டின் உரி­மை­களை மீட்க, இந்­தியாவை காப்­பாற்­று­வ­தற்­கான மிக, மிக முக்­கி­ய­மான தேர்­தல் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். திமுக இளை­ஞர் அணி­யின் 2வது மாநில மாநாட்­டின் வெற்­றிக்­காக உழைத்த திமுக தலை­வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்­ளிட்ட தலை­மை கழக நிர்­வா­கி­க­ளுக்­கு நன்றி கூறும் நிகழ்ச்சி சென்னை குறிஞ்சி இல்­லத்­தில் நடந்தது.

இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
இந்­திய ஒன்­றி­யமே திரும்­பி பார்க்­கின்ற வகை­யில், ஒரு மிகுந்த எழுச்­சி­யான மாநாட்டை, கடந்த ஜன­வரி 21ம் தேதி சேலத்­தில் திமுக இளை­ஞர் அணி நடத்தியதன் மூலம் அந்த வெற்­றிக்­காக உழைத்த பாடு­பட்ட உங்கள் அத்­தனை பேருக்­கும் நன்றி தெரி­விக்கிறேன். குறிப்பாக இந்த வாய்ப்பை இளை­ஞர் அணிக்கு அளித்த முத­ல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், பொதுச் செய­லா­ளர் துரைமுருகனுக்கும், தலை­மை கழக நிர்­வா­கி­கள் அனைவருக்கம் நன்றி. வெற்றி மாநா­டாக்­கிய மாவட்­ட செய­லா­ளர்­க­ளின் உழைப்பை என் வாழ்­நாள் முழு­வ­தும் மறக்க மாட்­டேன்.

நாடு முடிந்­தது, கிளம்­பி­னோம் என்று இல்­லா­மல் அதில் நிறை­வேற்­றப்­பட்ட 25 தீர்­மா­னங்­களை, தமிழ்­நாட்­டின் மூலை முடுக்­கெல்­லாம் கொண்டு சேர்க்­கும் வித­மா­க தீர்­மான விளக்­க பொதுக் கூட்­டங்­க­ளை­யும் நீங்­கள் சிறப்­பாக நடத்தி வரு­கி­றீர்­கள். அடுத்து முத­ல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்­த­நாள் வர இருக்­கிறது. எனவே தெரு­மு­னை கூட்­டங்­களை நடத்­துங்­கள். தலை­வரின் தலை­மை­யி­லான திமுக அர­சின் சாத­னை­கள், ஒன்­றிய அரசு செய்த துரோ­கங்­க­ளை தெருமுனை கூட்­டங்­க­ளில் பேசி­னால் பிரசா­ரத்­திற்கு அது மிக­வும் உத­வி­க­ர­மாக இருக்­கும்.

இது மிக முக்­கி­ய­மான தேர்­தல். மாநாட்­டின் வெற்றி 50 சத­வீதம்­ தான். மீத­முள்ள 50 சத­வீத வெற்றி என்­பது நாடா­ளு­மன்­ற தேர்­த­லில் 40க்கு 40 கண்­டிப்­பாக ஜெயித்­தாக வேண்­டும். அப்­போதுதான் மாநாடு 100 சத­வீத வெற்­றியை அடை­யும். இந்­த தேர்­தல் சாதா­ரணமானது கிடை­யாது. பிர­த­ம­ரை தேர்ந்­தெ­டுக்­கி­ற தேர்­தல் என அலட்­சி­ய­மாக இருந்­து விட கூ­டாது. தமிழ்­நாட்­டின் உரி­மை­களை மீட்க, இந்­திய ஒன்­றி­யத்­தை காப்பாற்றுவதற்கான மிக, மிக முக்­கி­ய­மான தேர்­தல். நமக்­கு சாத­க­மான ஒன்­றிய அரசு அமைந்­தால்­தான் நம் நாட்­டுக்­கும், நம் தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­கும் ஒரு விடிவு காலம் பிறக்­கும்.

நம் உரி­மை­களை மீட்க முடி­யும். அதன் மூலம் 2026ல் மீண்­டும் நாம் ஆட்சி பெறு­வதை மீண்­டும் நாம் உறுதி செய்­தாக வேண்­டும். நாம் எல்­லோ­ரும் சேர்ந்து உழைக்க வேண்­டும். கருத்து வேறு­பா­டு­கள், மனக்­க­சப்­பு­கள், மன­மாச்­ச­ரி­யங்­களை விடுத்து ஒற்­று­மை­யோடு செயல்­பட வேண்­டும். இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் அந்­தந்த மாவட்­டங்­க­ளில் நீங்கள் சொல்­கின்ற தேர்­தல் பணி­களை மேற்­கொள்­ள தயா­ரா­க களத்­தில் இருக்­கிறார்­கள். கலை­ஞ­ரின் வளர்ப்­பு­கள் நாம். திமுக தலை­வ­ரின் வழித்­தோன்­றல் நாம். ஆகவே நாடும் நமதே நாற்­ப­தும் நமதே என்­கிற வகை­யில், வரு­கின்ற நாடா­ளு­மன்­ற தேர்­தல் வெற்­றியை நம் தலை­வ­ரின் கரங்­க­ளில் சமர்ப்­பிக்க வேண்­டும். 2021ல் அடி­மை­களை வீழ்த்தி, தமிழ்­நாட்­டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விடி­ய­லை தந்­தார்­. இப்­போது வரு­கிற தேர்­த­லில் அடி­மை­களை விரட்­டுவோம். 2024ம் ஆண்­டு தேர்­த­லில் அடி­மை­க­ளின் முத­லா­ளி­கள் ஓனர்ஸ், ஏஜென்சி­யை­யும் பாசிஸ்ட்­டு­க­ளை­யும் வீழ்த்தி, ஒட்­டு­மொத்த இந்­தி­யா­வுக்­கும் நாம்தான் தர­வுள்­ளோம். பாசி­சம் வீழட்டும் இந்­தியா வெல்­லட்­டும். இவ்­வாறு அவர் பேசி­னார்.

நிகழ்ச்­சி­யில் பொதுச் செய­லா­ளர் துரை­மு­ரு­கன், பொரு­ளா­ளர் டி.ஆர்.பாலு, முதன்­மை செய­லா­ளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செய­லா­ளர்­கள் ஐ.பெரி­ய­சாமி, பொன்­முடி, ஆ.ராசா, அந்­தி­யூர் செல்­வ­ராஜ், கனிமொழி, அமைப்­பு செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்­கோ­வன், இணை அமைப்­பு செய­லா­ளர் அன்­ப­கம் கலை, துணை அமைப்­பு செய­லா­ளர்­கள் தாய­கம் கவி, ஆஸ்­டின், தயா­நிதி மாறன் எம்பி, இளை­ஞர் அணி­ துணைச் செய­லா­ளர்­கள் ஜோயல், இன்பா.ரகு, இளை­ய­ராஜா, மாலிக், பிர­காஷ், பிரபு, ஜி.பி.ராஜா, சீனி­வா­சன், ஆனந்­த­கு­மார், மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர்­கள் எபி­னே­சர், பிர­பா­கர் ராஜா, பிர­காஷ், ராஜா அன்­ப­ழ­கன், லோகேஷ் ஆர்.டி.மதன்­கு­மார் உள்­பட பல­ரும் கலந்துகொண்­ட­னர்.

The post பிர­த­ம­ரை தேர்ந்­தெ­டுக்­கும் தேர்­தல்தான் என அலட்­சி­ய­மாக இருக்க கூடாது; தமிழ்­நாட்­டின் உரி­மை­களை மீட்க, இந்­தியாவை காப்­பாற்­று­வ­தற்­கான முக்­கி­ய­மான தேர்­தல்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Minister ,Udayanidhi Stalin ,CHENNAI ,DMK ,2nd state convention ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...