×

மாசிமக விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்தில் இன்று(24-02-2024) உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் உத்தரவு

தஞ்சை: கும்பகோணம் மாசிமக விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்ட அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவின்போது மகாமகம் குளத்தில் புனித நீராட நாட்டின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவர்.

இந்நாளில் கும்பகோணம் மகாமகம் குளத்தில் புனித நீராடினால் செய்த பாவங்கள் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை. இந்நிலையில் மாசிமக விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு இன்று(24-02-2024) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிகையில்;

“இவ்வாண்டு கொண்டாடப்படவுள்ள மாசிமக திருவிழாவினை முன்னிட்டு இன்று(24-02-2024) ஒருநாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்திருந்தார்.

 

The post மாசிமக விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்தில் இன்று(24-02-2024) உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Thanjay District ,THANJAI ,DISTRICT ,KUMBAKONAM MONTHLY FESTIVAL ,Governor ,Deepak Jakob ,Tanji District ,Thanjavur district ,Kumbakonam ,Thanjai district ,Dinakaran ,
× RELATED புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில்...