×

திருவாடானை அருகே பேச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

 

திருவாடானை, பிப். 24: திருவாடானை அருகே கீழ்க்குடி கிராமத்தில் பழமையான பேச்சியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் சுமார் 12 ஆண்டுகளுக்கு கீழ்க்குடி கிராமத்தில் வசிக்கும் குலதெய்வ வழிபாடு செய்வோரால் புனரமைப்பு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு முதல் இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பேச்சியம்மன் மற்றும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post திருவாடானை அருகே பேச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Pachiyamman temple ,Thiruvadanai Kumbabhishekam ,Thiruvadanai ,Kilkudi village ,Kumbabhishekam ,Pachyamman Temple Kumbabhishekam ,Thiruvadan ,
× RELATED திருவாடானை அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம்