×

மதுரை வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் அமைச்சர் பி.மூர்த்தி அறிக்கை

 

மதுரை, பிப். 24: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம், கலைஞர் நினைவிடம் திறப்பு விழாவில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்பது, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை எழுச்சியுடன் கொண்டாடுவது போன்றவை குறித்து மதுரை வடக்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் இன்று 24ம் தேதி நடைபெற உள்ளதாக மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

அவர் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து மாவட்ட செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்ற காணொளி காட்சி வாயிலான ஆலோசனை கூட்டம் குறித்தும், கலைஞரின் சிறப்புமிக்க நினைவிடம் திறப்பு விழா வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று சிறப்பிப்பது குறித்தும், நாடே போற்றும் திராவிட மாடல் ஆட்சி செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1 எழுச்சித்திருநாளை பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது குறித்தும்,

இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்வது குறித்தும் மற்றும் திமுக ஆக்க பணிகள் குறித்த மதுரை வடக்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடக்கிறது. அவைத் தலைவர் எம்.ஆர்.எம்.பாலசுப்பிரமணியம் தலைமை வகிக்கிறார். தொகுதி பொறுப்பாளர்கள் பெருநாழி போஸ், வ.து.ஆனந்த், சுப.த. சம்பத், மாவட்ட துணைச் செயலாளர் ஆ.வெங்கடேசன் எம்.எல்.ஏ., முன்னிலை வகிக்கின்றனர்.

பிப்.24(இன்று) சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் மதுரை திருப்பாலையில் அமைந்துள்ள திருப்பாலை பெண்கள் கல்லூரி அருகே அமைந்துள்ள குறிஞ்சி திருமண மஹாலில் நடைபெற உள்ளது. இதில் மாநில, மாவட்ட ஒன்றிய, நகர, பகுதி, வட்டக் கழக, பேரூர் கழக நிர்வாகிகள், செயலாளர்கள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post மதுரை வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் அமைச்சர் பி.மூர்த்தி அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Madurai North District Executive Meeting District ,Minister ,P. Murthy ,Madurai ,Chief Minister ,M.K.Stal ,Madurai North District Activists Meeting District ,.Murthy ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...