×

திருவாடானையில் வாரச்சந்தை பகுதியில் பேவர்பிளாக் அமைப்பு

 

திருவாடானை பிப். 24: திருவாடானை வாரச் சந்தை பகுதியில் பேவர் பிளாக் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை குறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பேவர்பிளாக் அமைக்கப்பட்டுள்ளது. திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம் பகுதியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு காய்கறிகள், பழவகைகள், மீன், இறைச்சி உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும்.

இந்த வாரச்சந்தைக்கு சின்னக்கீரமங்கலம், பாரூர், பெரியகீரமங்கலம், சேந்தனி, ஓரிக்கோட்டை, பெருஞ்சையூர், இளமணி, கல்லூர், பாரதிநகர் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த பருவமழையின் போது இப்பகுதியில் பெய்த தொடர் கனமழையால் மண் சாலையான இந்த வாரச்சந்தை நடைபெறும் பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காட்சியளித்தது.  இதனால் சந்தைக்கு வரும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மேலும் அங்கு தற்காலிக கடை அமைக்கும் வியாபாரிகளும் சந்தைப்பகுதி சேறும், சகதியுமாக இருப்பதால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். சேறு, சகதி உள்ள பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் சென்று வந்த நிலையில், வாரச்சந்தை நடைபெறும் வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இந்த நிலையில் ஊராட்சி நிர்வாகத்தினர் இந்த வாரச்சந்தை நடைபெறும் வளாகத்தைச் சுற்றி சீரமைத்து பேவர் பிளாக் சாலை அமைத்துள்ளனர்.

The post திருவாடானையில் வாரச்சந்தை பகுதியில் பேவர்பிளாக் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Dinakaran ,Thiruvadan ,Chinnakeeramangalam ,Paverblock ,
× RELATED விஷ வண்டுகள் அழிப்பு