×

புதுக்கோட்டையில் ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து தொழிற் சங்கம் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து தொழிற் சங்கம் ஆர்ப்பாட்டம் நடந்தது. டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் போலீசாரின் தாக்குதலில் விவசாய இளைஞர் சுப்கரன் சிங் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றபோது மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதுக்கோட்டையில் அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் கருப்புக் கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொமுச மாவட்ட செயலர் கணபதி தலைமை வகித்தார். தொமுச தலைவர்கள். ரெத்தினம்,. வேலுச்சாமி, சிஐடியு தலைவர்கள். முகமதலிஜின்னா, ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர். மாதவன் உள்ளிட்டோரும் பங்கேற்று பேசினர்.

The post புதுக்கோட்டையில் ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து தொழிற் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : union government ,Pudukottai ,Subkaran Singh ,Delhi ,central government ,
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...