×

வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் உள்ளவர்களுக்கு படகுகள் மூலம் உணவு வழங்கல்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் ஆய்வு

காஞ்சிபுரம்: கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகரில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் உள்ள மக்களுக்கு படகுகள் மூலம் உணவு வழங்குவதை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் மேலக்கோட்டையூர் – படூரில் சாலைகளில் தேங்கிய வெள்ள நீரை அகற்ற நடவடிக்கை எடுத்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த பெரும் மழை காராணமாக மாவட்டத்தில் உள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. ஏரியில் இருந்து வெளியேறும் உபரி வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து மக்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கூடுவாஞ்சேரி அருகே உள்ள பெருமாட்டுநல்லூர் – காயரம்பேடு – நந்திவரம் – காரணைப்புதுச்சேரி – ஊரப்பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து வெளியேறிய அளவுக்கு அதிகமான வெள்ள நீர் கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகரில் உள்ள குடியிருப்புகளில் புகுந்தது. அக்குடியிருப்புகளில் உள்ள வீடுகளை சுற்றிலும் 4 அடி உயரத்திற்கு மேல் வெள்ள நீர் சூழ்ந்து அந்த நகரே வெள்ளக்காடானது. அங்கு இருந்து வெள்ள நீர் ஜி.எஸ்.டி. சாலையில் 2 அடி உயரத்திற்கு மேல் ஆறாக ஓடியது. இதன் காரணமாக ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்து தடைப்பட்டு வாகனங்கள் வெள்ள நீரில் ஊர்ந்து சென்றனர். மகாலட்சுமி நகரில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து பொது மக்கள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதை அறிந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்தார். செங்கல்பட்டு மாவட்ட மழை வெள்ள கண்காணிப்பு அலுவலர் அமுதா, காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கூடுவாஞ்சேரி எம்.கே.டி.கார்த்திக், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் வி.எஸ்.ஆராமுதன், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் உதயா கருணாகரன், கூடுவாஞ்சேரி பேரூர் செயலாளர் ஜி.கே.லோகநாதன் ஆகியோர் அவருடன் சென்றனர்.கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி.சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெள்ள நீரில் இறங்கி நடந்து சென்று ஆக்கிரமிப்புகளால் அடைபட்ட கால்வாயை பார்வையிட்டார். வெள்ள நீர் தேசிய நெடுஞ்சாலையில் தேங்குவதற்கு காரணமான ஆக்கிரமிப்புகளை இடித்து தள்ள உத்தரவிட்டார். கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகரில் வெள்ள நீரில் சிக்கி தத்தளிக்கும் மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் பால் ஆகியவற்றை படகுகள் மூலம் அனுப்பி வைத்தார். பின்னர் வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் மேலக்கோட்டையூரில் உள்ள வி.எஸ்.டி.பல்கலைக்கழகம் ஏதிரில் அளவுக்கு அதிகமான வெள்ள நீர் 2 அடிக்கு மேல் காட்டாறாக வழிந்தோடுவதை வெள்ள நீரில் இறங்கி அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டார். அடைபட்ட கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி வெள்ள நீர் விரைவில் வெளியேற நடவடிக்கை எடுத்தார். அடுத்து அவர் கேளம்பாக்கம் அருகே பழைய மாமல்லபுரம், ஒ.எம்.ஆர்.சாலையில் படூரில் உள்ள இந்துஸ்தான் பல்கலைக்கழகம் ஏதிரில் அளவுக்கு அதிகமான வெள்ள நீர் 2 அடிக்கு மேல் காட்டாறாக வழிந்தோடுவதை வெள்ள நீரில் இறங்கி அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டார். அடைபட்ட கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி வெள்ள நீர் விரைவில் வெளியேற நடவடிக்கை எடுத்தார். உடன், திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஜி.சி.அன்புச்செழியன், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் எல்.இதயவர்மன், திருப்போரூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பையனூர் சேகர், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர் தணிகாசலம், மேலக்கோட்டையூர் சுரேஷ், முட்டுகாடு மயில்வாகனன், படூர் தாரா சுதாகர், பேரூர் செயலாளர் ஜி.கே.லோகநாதன் ஆகியோர் அவருடன் சென்றனர்….

The post வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் உள்ளவர்களுக்கு படகுகள் மூலம் உணவு வழங்கல்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,Th.Mo.Anparasan ,Kanchipuram ,Thamo.Anparasan ,Guduvanchery Mahalakshmi town ,
× RELATED பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில்...