×

மீனவர் பிரச்னை பாம்பன் கடலில் இறங்கி மனிதசங்கிலி போராட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள
அறிக்கை: பிரதமர் மோடி ஆட்சியின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட தோல்வியினால் தான் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அத்துமீறலும், தாக்குதலும் தொடர்கிறது. இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டிக்கிற வகையில், பாரம்பரியமாக பங்கேற்கிற கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவை புறக்கணிப்பது எனவும், நாளை முதல் தொடர் உண்ணாவிரதமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மீனவர் போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது. ேமலும், ஒன்றிய அரசு மற்றும் இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் மீதான விரோதப் போக்கை கண்டித்து எனது தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசியத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில், வரும் 27ம்தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம். அதைத் தொடர்ந்து, 28ம் தேதி குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்ட வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

The post மீனவர் பிரச்னை பாம்பன் கடலில் இறங்கி மனிதசங்கிலி போராட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Pampan Sea ,Chennai ,Tamil ,Nadu ,Congress ,Selvaperunthagai ,Sri Lankan Navy ,Tamil Nadu ,Modi ,Federation of Rameswaram Fishermen's Associations Tamil Nadu ,
× RELATED மண்டபம் ரயில் நிலையத்தில் குடிநீர் வசதி பயணிகள் வலியுறுத்தல்