×

ஆவடி நாசர் எம்எல்ஏ அறிக்கை மத்திய மாவட்ட திமுக அவசர ஆலோசனை கூட்டம்

 

ஆவடி: திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் அறிக்கை ஒன்று வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் இன்று 24.02.2024 மாலை 03.00 மணிக்கு, பூவிருந்தவல்லி ஹோட்டல் ஹைவே ஜெயினில் மத்திய மாவட்ட அவைத் தலைவர் மா.ராஜி தலைமையில் நடைபெறுகிறது.

மேலும் இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆ.கிருஷ்ணாசாமி எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஜே.ரமேஷ், மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் சி.ஜெரால்டு, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பிரபு கஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் வி.ஜெ.சீனிவாசன், எஸ்.ஜெயபாலன், காயத்ரி ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் பா.நரேஷ் குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் த.எத்திராஜ், ஜி.ராஜேந்திரன், கு.விமல் வர்ஷன், எம்.முத்தமிழ் செல்வன், வி.குமார், ஜெ.மகாதேவன், காஞ்சனா சுதாகர் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

கூட்டத்தில் திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளான மார்ச் 1 இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் குறித்தும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் பிற பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. எனவே, இக்கூட்டத்தில் மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இக்கூட்டத்திற்கு முன்னதாக பூவிருந்தவல்லி கிழக்கு ஒன்றிய செயலாளர் ப.ச.கமலேஷ் வரவேற்புரை ஆற்றுகிறார் முடிவில் திருமழிசை பேரூர் செயலாளர் தி.வே.முனுசாமி நன்றி கூறுகிறார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post ஆவடி நாசர் எம்எல்ஏ அறிக்கை மத்திய மாவட்ட திமுக அவசர ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Avadi Nasser ,MLA ,Central district DMK ,Aavadi ,Tiruvallur Central District ,Aavadi Legislative Assembly Member ,S.M. Nasar ,Thiruvallur Central District DMK Municipal ,Union ,City ,Barur Secretaries ,Central District DMK Emergency Meeting ,
× RELATED முன்னாள் திமுக பொறுப்பு குழு...