×

தலித், பழங்குடியினர் மீது காங்கிரசுக்கு அக்கறை கிடையாது: பிரதமர் மோடி தாக்கு

வாரணாசி: மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் முனைப்பில் பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு, பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். அதன்படி உத்தரபிரதேசத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு தனது வாரணாசி தொகுதிக்கு சென்றார். அங்கு ரூ.13 ஆயிரத்து 202 கோடி அளவிலான நலத்திட்டங்களை அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்தார். தொடர்ந்து சாந்த் ரவிதாசின் 647வது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அவரது சிலையை திறந்து வைத்து பேசினார்.

அப்போது, “பழங்குடியினத்தை சேர்ந்த பெண் ஒருவரை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்க எதிர்க்கட்சியினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். குடும்ப நலனில் மட்டுமே அக்கறை கொண்ட காங்கிரஸ் கட்சியால் தலித், பழங்குடியினர் நலன்களை பற்றி சிந்திக்க முடியாது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி நாட்டு மக்களை சுரண்டுகின்றனர்” என்று கடுமையாக தாக்கி பேசினார்.

* காசி வளர்ச்சிக்கான முன்மாதிரி – மோடி

தொடர்ந்து பனாரஸ் இந்து பல்கலைக் கழககத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமஸ்கிருத போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை பிரதமர் மோடி வழங்கினார். பின்னர் அவர்களிடையே பேசிய பிரதமர் மோடி, “காசி தற்போது பாரம்பரியம் மற்றும் வளர்ச்சியின் முன்மாதிரியாக பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் அடுத்த ஐந்தாண்டுகளில் வளர்ச்சியின் முன்மாதிரியாக மாறும். இது மோடியின் உத்தரவாதம்” என்று இவ்வாறு தெரிவித்தார்.

The post தலித், பழங்குடியினர் மீது காங்கிரசுக்கு அக்கறை கிடையாது: பிரதமர் மோடி தாக்கு appeared first on Dinakaran.

Tags : Congress ,PM Modi ,Varanasi ,Modi ,Lok Sabha elections ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…