- மோடி
- மாதாபூர்
- பல்லடம்
- திருப்பூர் மாவட்டம்
- நரேந்திர மோடி
- En Man En மக்கள் வாக்
- தொரவலூர் ஊராட்சி
- திருப்பூர் வடக்கு ஒன்றியம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூரில் வரும் 27ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் என் மண் என் மக்கள் நடைபயண நிறைவு விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்நிலையில், திருப்பூர் வடக்கு ஒன்றியம் தொரவலூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் பாஜ சார்பில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் குறித்த அறிவிப்பு, வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டு வந்தது. அப்போது அங்கு வந்த சிலர் பாஜவினர் ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று ரூ.500 அச்சிடப்பட்ட ரசீதினை காட்டி ஒவ்வொரு கடைகளிலும் கட்டாய வசூலில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கடை உரிமையாளர்கள் பேசும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. இதில் ஒரு பெண் உரிமையாளர் பேசும் வீடியோவில், 4 பாஜவினர் தனது கடைக்கு அருகில் உள்ள கடையில் சென்று 500 ரூபாய் ரசீதினை வழங்கி பணம் வேண்டும் என்றனர். ஆனால் அந்தக் கடைக்கார பெண், 20 ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளார். 20 ரூபாய் வாங்க நாங்க என்ன பிச்சைக்காரர்களா? என கேட்டனர். 20 ரூபாய் என்றாலும் ஒரு ஊனமுற்றோர் வந்து கேட்டால் கொடுக்கலாம். அதில் இரு லாஜிக் இருக்கு. இவங்களுக்கு எதற்கு நாம் கொடுக்கணும். 500 ரூபாய் கேட்றாங்கனு அந்த அக்கா சொல்லுச்சு. அப்போது நான் எதுக்கு 500 ரூபாய் தரணும் கேட்டேன். தலைவரு வர்றாருனா மக்களை பார்க்க வர்றாரு.. அவர்தான் மக்களுக்கு கொடுக்கணும். நம்மகிட்ட வந்து கேட்குறாங்கன்னா அது என்னாங்க தலைவரு. அப்படிப்பட்ட தலைவரு எங்க ஊருக்கு தேவையில்லை. அவங்கள் போக சொல்லுங்கணு சொன்னேன். உடனே ஓனர் இல்லை என்று அந்த அக்கா சொல்லுது. ஓனர் கால் பண்ணி கொடுங்கனு சொல்லு பேசுறாங்க.. அவங்கள யாருன்னு இவங்களுக்கு தெரியாது. இவங்கள யாருன்னு அவங்களுக்கு தெரியாது. ஒரு பொண்ணு கடை நடத்தது என்ன பண்ணிட போதுனு இளக்காரம். மல்லுக்கட்டி 200 ரூபாய் வாங்கிட்டு போனாங்க…
நோட்டீஸ் 500 ரூபாய் அடிச்சிட்டு வர்றாங்க… அவங்களுக்கு யார் அந்த ரைட்ஸ் கொடுக்குறது. அப்புறம் எதிரில் இருக்கிற இந்த பிளாக்கோட ஓனர்கிட்ட கேட்கிறோம், அவங்க என்னையும் மிரட்டி 100 ரூபாய் வாங்கிட்டு போனாங்கனு சொல்றாங்க… பேக்கரி கடைக்காரர்கிட்டையும் வாங்கிட்டு போனாங்க.. அவனால் வாய்ஸ் அவுட் பண்ண முடியல.. நான் அங்கு போய் கேள்வி கேட்குறேன்னு என் கடைக்குல வரல… ஒரு 5,000 ரூபாய் வாங்கி இருப்பாங்க.. மிஞ்சி போன அங்க உட்காந்து தண்ணி அடிப்பாங்க. ஒரு 3000 ரூபாய் தண்ணி அடிக்க செலவு பண்ணி இருப்பாங்க.. வாய்ஸ் அவுட் பண்ற இடத்துக்கு போகல… அவங்க தெளிவாகதான் இருக்காங்க… பேக்கரிக்காரன்னா எப்படி கடை நடத்துறனு பார்ப்போம்னு சொல்றாங்க.. இந்த கடைக்கு போகலையானு ஒருத்தவரு கேட்குறாரு.. அதுக்கு என்னைய ஒருத்தவன் சொல் அவங்கள் மெதுவா பாத்துக்காலம்னு சொல்றாங்க… அவங்க என்னய என்ன பாத்துப்பாங்க.. கடன் வாங்கி கடை நடத்துறோம். அவங்களாய நாங்கள் வாழ்றோம்’ என்று ஆவேசமாக பேசுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The post மோடி கூட்டத்துக்கு பெண்களை மிரட்டி கடை கடையாக பாஜவினர் வசூல்: 20 ரூபாய் தந்தவரிடம் நாங்க என்ன பிச்சைக்காரனா? என ஆவேசம் appeared first on Dinakaran.