×

சூரிய காற்றின் எலெக்ட்ரான் நிலையை கண்டறிந்தது ஆதித்யா: இஸ்ரோ தகவல்

சென்னை: சூரிய காற்றின் எலெக்ட்ரான்கள் நிலையை ஆதித்யா-எல் 1 முழுமையாக கண்டறித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனை ஆராய்வதற்காக கடந்த செப்.2ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. கடந்த ஜன.6ம் தேதி லெக்ராஞ்சியன் புள்ளி எல் 1 புள்ளியில் ஒளிவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இந்்நிலையில் இஸ்ரோ நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவு: ஆதித்யா விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள பாபா கருவி சரியாக செயல்பட்டு வருகிறது. இது கடந்த பிப்.10, 11 ஆகிய நாட்களில் நிகழ்ந்த சூரியக் காற்றின் தாக்கத்தைக் கண்டறிந்தது. இது கருவியின் செயல்திறனை காட்டுகிறது. மேலும் விண்வெளி வானிலை நிலைகளை கண்காணித்து வருகிறது. சூரிய காற்றின் எலெக்ட் ரான்கள் நிலையை முழுமையாக கண்டறிந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சூரிய காற்றின் எலெக்ட்ரான் நிலையை கண்டறிந்தது ஆதித்யா: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Tags : ISRO ,CHENNAI ,Satish Dhawan Space Research Center ,Sriharikota, Andhra Pradesh ,Sun ,Aditya ,
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...