×
Saravana Stores

நிலவில் வெற்றிகரமாக கால் பதித்தது ஒடிஸியஸ் விண்கலம்: அமெரிக்க தனியார் நிறுவனம் சாதனை

வாஷிங்டன்: அமெரிக்காவின் ‘இன்டியூட்டிவ் மெஷின்ஸ்’எனும் தனியார் நிறுவனம் தயாரித்து அனுப்பிய விண்கலம், நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. 50 ஆண்டுகளுக்குப்பிறகு அமெரிக்க விண்கலம் நிலவில் மீண்டும் தரையிறங்கியுள்ளது. அமெரிக்காவின் இன்டியூட்டிவ் மெஷின்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஐஎம்-1 விண்கலத்தின் ஒடிஸியஸ் லேண்டரானது, கடந்த 15ம் தேதி கேப் கனாவரலில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

இந்த விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து வெற்றிகரமாக நிலவின் சுற்று வட்டப்பாதையில் இணைந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் விண்ணில் தரையிறங்கியது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. தானியக்க முறையில் ‘லேண்டர்’ தரையிறங்கும் முயற்சியில் இடையூறுகள் வந்தபோதும்,அமெரிக்க பொறியாளர்கள் முழுமூச்சுடன் செயல்பட்டு மீண்டும் வெற்றிப்பாதையில் செலுத்தினர். கடந்த 1972ல் அமெரிக்காவின் அப்போலோ 17 விண்கலம் நிலவில் கால்பதித்தது. ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் நிலவிற்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பியுள்ளன. 50 ஆண்டுகளுக்குப்பின் அமெரிக்க விண்கலம் ஒன்று நிலவில் மீண்டும் தரையிறங்கியுள்ளது. இந்த முயற்சியில் தனியார் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

The post நிலவில் வெற்றிகரமாக கால் பதித்தது ஒடிஸியஸ் விண்கலம்: அமெரிக்க தனியார் நிறுவனம் சாதனை appeared first on Dinakaran.

Tags : Washington ,Intuitive Machines' ,Odysseus ,Intuitive Machines of America ,Moon ,
× RELATED ஹாலோவீன் தினம் : பயங்கர பேய் உருவங்கள்,...