×

அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.16 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு

ஸ்ரீபெரும்புதூர்: உமையாள்பரணஞ்சேரி அரசு உயர்நிலைப்பள்ளியில், ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தினை தொழிற்சாலை நிர்வாக இயக்குநர் கீர்த்தி பிரகாஷ் திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம், வளையங்கரணை ஊராட்சிக்கு உட்பட்ட உமையாள்பரணஞ்சேரி அரசு உயர்நிலைப்பள்ளியில், தனியார் தொழிற்சாலை சார்பில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம், 2 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டது.

அதன் திறப்பு விழா வளையங்கரணை ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, தொழிற்சாலை பொது மேலாளர் ஜெகதீஷ், தனியார் தொண்டு நிறுவனத்தின் தலைவர் செந்தூர்பாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தொழிற்சாலை நிர்வாக இயக்குநர் கீர்த்தி பிரகாஷ் கலந்துகொண்டு, புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும், ரூ.24 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட வளையங்கரணை புது தாங்கல் ஏரியை பார்வையிட்டனர். பின்னர், ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

The post அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.16 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Government High School ,Sriperumbudur ,Factory Managing Director ,Keerthy Prakash ,Umaiyalparananchery Government High School ,Kanchipuram district ,Kunradthur union ,Umaiyalparananjeri government high school ,Panchayat ,
× RELATED ஊராட்சி தலைவரின் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்