×

ரயில் மூலம் 16 நாட்கள் நேபாள யாத்திரை

சென்னை: சீனிவாசா டூர்ஸ் கடந்த பல ஆண்டுகளாக எண்ணற்ற சுற்றுலாக்களை குறைந்த கட்டணத்தில் ஏற்பாடு செய்து வருகிறது. அந்த வகையில், 16 நாள் நேபாள சுற்றுலாவாக, சென்னையில் இருந்து ரயில் மூலம் லக்னோ சென்று, நைமிசாரண்யம், அயோத்தி ராமர் கோயில், சரயு நதி நீராடல், புத்தர் பிறந்த லும்பினி, போக்ரா, ஜோம்சோம், முக்தி நாத் தரிசனம், மனகமனா தேவி, காட்மாண்டு, பசுபதி நாத் தரிசனம், புத்த நீலகண்டா (ஜல நாராயணன்), குஜ்ஜேஸ்வரி சக்தி பீடம், சீதாதேவி பிறந்த இடம் ஜனக்பூர் மற்றும் காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி, அன்னபூரணி தரிசனம் முடித்து ரயில் மூலம் சென்னை திரும்புதல்.

யாத்திரை புறப்படும் நாள் மார்ச் 6, ஏப்ரல் 10, 24, மே 8, 22 மற்றும் ஜூன் 12. ரயில், பஸ், தங்கும் வசதி, உணவு சேர்த்து ஒருவருக்கு ரூ.29,900 மட்டும். மேலும், குரூப் சுற்றுலா குறைந்த கட்டணத்தில் நடத்தப்படும் என சீனிவாசா டூர்ஸ் உரிமையாளர் தெரிவித்தார். மேலும், 11 நாட்கள் சிக்கிம், கேங்டாக், டார்ஜிலிங் சுற்றுலாவும் உண்டு. இதில் சங்கு ஏரி, பாபா மந்திர், ரோப் கார், மினி பூங்கா, மிருககாட்சி சாலை, டைகர் ஹில்ஸ் சூரியோதயம் மற்றும் கூம் துறவியர் மடம், ஹவுரா பிரிட்ஜ், பேலூர்மத், கல்கத்தா காளி கோயில் ஆகிய இடங்களை பார்க்கலாம். சுற்றுலா செல்லும் தேதி ஏப்ரல் 24, மே 8, 22 தேதி. நபர் ஒருவருக்கு ரூ.17,900 மட்டும் என்றார்.

The post ரயில் மூலம் 16 நாட்கள் நேபாள யாத்திரை appeared first on Dinakaran.

Tags : Days ,CHENNAI ,Srinivasa Tours ,Nepal ,Lucknow ,Naimisaranyam ,Ayodhya Ram Temple ,Sarayu ,
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...