×

காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயில்கள் நாளை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை முதல் மதியம் வரை சென்னை கடற்கரை-தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: கோடம்பாக்கம் முதல் தாம்பரம் வரையிலான வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, காலை 10.30, 10.40 10.50 11.10 11.20, 11.30, 11.40 மற்றும் மதியம் 12, 12.10, 12.20, 12.40, 1.15, 1.30 மற்றும் பிற்பகல் 2, 2.30, மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கி புறப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் காலை 11, 11.50, மற்றும் மதியம் 12.30 12.50, 1.35, 2.15 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கத்தில் காலை 10.5, 10.15, 10.25, 10.45, 10.55, 11.5, 11.25, 11.35 மற்றும் மதியம் 12, 12.15, 12.45, 1.30, 1.45, மற்றும் பிற்பகல் 2.15, 4.30 தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் காலை 9.40, 10.55, 11.5, 11.30, மற்றும் மதியம் 12, 1, ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் காஞ்சிபுரத்திலிருந்து காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.

மேலும், பயணிகளின் வசதிக்காக தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு வரை காலை 11.55, 12.45, மற்றும் மதியம் 1.35, 1.45 1.55 மற்றும் 2.40, 2.55 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதே போல் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே காலை 9.40, 9.30, 10.55, 11.5 மற்றும் 11.30, 12, 1 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த நேரத்தில் பயணிகளின் போக்குவரத்தை எளிமையாக்க இவ்வழித்தடத்தில் கூடுதல் சேவைகளை இயக்க போக்குவரத்து கழகத்திடமும், மெட்ரோ ரயில் நிர்வாகத்திடமும் கூடுதல் சேவைகளை இயக்க தெற்கு ரயில்வே கோரிக்கை வைத்துள்ளது.

The post காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயில்கள் நாளை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Beach ,Chengalpattu ,Southern Railway ,CHENNAI ,Tambaram ,Kodambakkam ,Dinakaran ,
× RELATED சென்னை கடற்கரை – செங்கல்பட்டு ரயில்...