×

ராகி சப்பாத்தி

தேவையானவை

ராகி மாவு – 1 கப்
தண்ணீர் – முக்கால் கப்
உப்பு – அரை தேக்கரண்டி
எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை:

ஒரு வாணலியில் முக்கால் கப் தண்ணீர்விட்டு அதனுடன் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்து வரும்போது, ராகி மாவை சேர்த்து லேசாக கிளறிவிட்டு அடுப்பை அணைத்துவிடவும். பின்னர், மாவு சூடு ஆறியதும் சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு அழுத்தம் கொடுத்து பிசைந்து கொள்ளவும். பின்னர், சிறிதளவு கேழ்வரகு மாவில் புரட்டி சப்பாத்திகளாக திரட்டி எடுத்து தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். ராகி சப்பாத்தி ரெடி. இதனுடன் தொட்டுக் கொள்ள தக்காளி குருமா நன்றாக இருக்கும்.

The post ராகி சப்பாத்தி appeared first on Dinakaran.

Tags : chapati ,Ragi Chapati ,Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...