×
Saravana Stores

மஞ்சூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை விற்பனையை தடுப்பதற்கு தீவிர சோதனை

மஞ்சூர் : நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், டிஸ்போசல் டம்ளர்கள் மற்றும் தட்டுகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று கீழ்குந்தா பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் மஞ்சூர் பஜார் பகுதியில் உள்ள பெட்டி கடைகள், மளிகை மற்றும் காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் ஹோட்டல், பேக்கரி, டீ கடைகள் மற்றும் மீண், பழவிற்பனை உள்ளிட்ட நடமாடும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதேபோல் காலாவதியான பொருட்கள், எடை, தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் குறித்தும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து பேரூராட்சி அலுவலர்கள் கூறுகையில், ‘‘மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தல் பேரில் சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்கும் கேரி பேக்குகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பு, விற்பனை மற்றும் உபயோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே கேரி பேக்குகள், டிஸ்போசல் டம்ளர் மற்றும் தட்டுகள் உள்ளிட்ட அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பதும், விற்பனை செய்வதும் மற்றும் உபயோகிப்பதும் குற்றமாகும். தடையை மீறி கேரி பேக்குகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது அபராதம் மற்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தனர்.

The post மஞ்சூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை விற்பனையை தடுப்பதற்கு தீவிர சோதனை appeared first on Dinakaran.

Tags : Manjur ,Manjoor ,Nilgiris district ,Kilikunda ,Manjoor Bazaar ,
× RELATED மஞ்சூர் பகுதியில் பூத்துக்குலுங்கும் ரெட்லீப் மலர்கள்