- தட்சிணாமூர்த்தி
- கொல்லிதம் ஆறு
- குடந்தை
- கும்பகோணம்
- குடந்தை
- பட்டுக்குடி
- கோவிந்தநாதசேரி ஊராட்சி
- தஞ்சாவூர் மாவட்டம்
- தின மலர்
கும்பகோணம் : குடந்தை அருகே கொள்ளிடம் ஆற்றில் 4 அடி உயர தட்சிணாமூர்த்தி சிலை கண்டெடுக்கப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கோவிந்தநாட்டுசேரி ஊராட்சி, பட்டுக்குடி கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் கருங்கல்லால் ஆன சிலை கிடப்பதாக ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், வருவாய் துறையினருக்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து பாபநாசம் வட்டாட்சியர் (பொ) முருககுமார், துணை வட்டாட்சியர் பிரபு, வருவாய் ஆய்வாளர் ராஜதேவி, கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி, கபிஸ்தலம் சப் இன்ஸ்பெக்டர் முருகதாஸ் ஆகியோர் அங்கு சென்று சிலையை பார்வையிட்டனர்.விசாரணையில் ஆற்றில் கிடந்தது தட்சிணாமூர்த்தி சிலை என்பதும், அந்த சிலை 4 அடி உயரம் இருந்தது என தெரிய வந்தது.
இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள், பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த சிலையை ஆற்றிலிருந்து மீட்டனர். பின்னர் அந்த சிலை பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
The post குடந்தை அருகே கொள்ளிடம் ஆற்றில் 4 அடி உயர தட்சிணாமூர்த்தி சிலை கண்டெடுப்பு appeared first on Dinakaran.