- திருகல்யாணம்
- மாசி திருவிழா
- திருத்தணி
- சுப்ரமணிய சாமி
- கோவில்
- திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவில்
- திருக்கல்யாணம்
- உற்சவர் முருகா
- வள்ளியம்மை தாயார்
- திருத்தணி சுப்பிரமணியசாமி கோவில்
- இறைவன் முருகன்
- திருக்கோயில் மாசி திருவிழா
- திருத்தணி சுப்பிரமணிய சாமி கோயில் மாசி திருவிழா
திருத்தணி: திருத்தணி சுப்பிரமணிய சாமி திருக்கோயில் மாசி பெருவிழாவில் உற்சவர் முருகப்பெருமானுக்கும், வள்ளியம்மை தாயாருக்கும் பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது. திருத்தணி: திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5- படை திருக்கோயிலாகும். திருக்கோயில் மாசி திருவிழா நிகழ்ச்சி பிப்ரவரி 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நிகழ்வில் முக்கிய தினமான மாசி திருவிழா 9-வது நாள் நிகழ்வில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளியம்மை திருக்கல்யாணம் மலைக்கோயில் வள்ளி மண்டபத்தில் வேத மந்திரங்கள் முழங்க சிறுவரிசை பொருட்களுடன் திருக்கல்யாண வைபவம் திரளான பக்தர்கள் முன்னிலையில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளியம்மை திருக்கல்யாணம் கோலாகலமாக இன்று அதிகாலை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க உற்சவர் முருகப்பெருமான் வள்ளியம்மை தாயாருடன் திருக்கோயில் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதங்கள் மற்றும் திருமாங்கல்ய கயிறு வழங்கப்பட்டது. அதிகாலை முதலே மலை கோவிலில் திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
The post திருத்தணி சுப்பிரமணிய சாமி கோயில் மாசி பெருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது appeared first on Dinakaran.