×

போர் ரஷ்யா பக்கம் சாய்கிறதா?.. உக்ரைனின் அவிடிகா பகுதியை கைப்பற்றியது ரஷ்ய ராணுவம்

மாஸ்கோ: உக்ரைனின் அவிடிகா பகுதியை ரஷ்யா கைப்பற்றியது. உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கி வரும் 24ம் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. ஆனால் போர் முடிவுக்கு வரவில்லை. இந்த போரில் உக்ரைனின் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில் உக்ரைனிடம் இருந்து பக்மத் நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்றிய நிலையில், தற்போது அமெரிக்க நிதியுதவி தடைபட்டு, ஆயுதங்களின்றி தவிக்கும் உக்ரைன் ராணுவம், அவிதிவ்கா நகரை விட்டு வெளியேறி விட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.

இது குறித்து பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்; அவிடிகா பகுதியை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ராணுவத்தினருக்கு எனது பாராட்டுகள். உக்ரைனில் ரஷ்யர்களைக் காக்கும் ராணுவ நடவடிக்கையில் இது ஒரு முக்கிய மைல்கல். வரும் நாட்களில் உக்ரைனில் பல பகுதிகள் கைப்பற்றப்படும் என்று அறிவித்துள்ளார்.

The post போர் ரஷ்யா பக்கம் சாய்கிறதா?.. உக்ரைனின் அவிடிகா பகுதியை கைப்பற்றியது ரஷ்ய ராணுவம் appeared first on Dinakaran.

Tags : Russia ,Avitica region of Ukraine ,Moscow ,Ukraine ,Russia war ,24th ,Dinakaran ,
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...