×

ரூ.10 லட்சம் நிவாரணம் கோரி பட்டாசு தொழிலாளர் போராட்டம்

ஏழாயிரம்பண்ணை, பிப்.23: பட்டாசு விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ஆலை நிர்வாகம் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கிட கோரி சிஐடியு சார்பில் போராட்டம் நடைபெற்றது. வெம்பக்கோட்டை அருகே ராமுத்தேவன்பட்டி பட்டாசுஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆலை நிர்வாகம் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கிட வேண்டும் என சிஐடியு பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வெம்பக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். துவக்கி வைத்து சிஐடியு மாவட்டத் தலைவர் மகாலெட்சுமி பேசினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட பொதுச் செயலாளர் பாண்டியன் பேசினார். முடிவில் சிஐடியு மாவட்ட செயலாளர் தேவா கண்டன உரையாற்றினார்.

பின்பு, பட்டாசு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட பொருளாளர் ஜெபஜோதி, சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் செல்லச்சாமி, ராமர், முருகன், பிச்சைக்கனி, மனோஜ்குமார், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரபாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சசிக்குமார், சுரேஷ்குமார், ஒன்றிய செயலாளர் முனியசாமி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

The post ரூ.10 லட்சம் நிவாரணம் கோரி பட்டாசு தொழிலாளர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Ejayarampannai ,CITU ,Ramutevanpatti ,Vembakkottai ,Dinakaran ,
× RELATED கடும் வெப்ப அலைவீச்சிலிருந்து தூய்மை பணியாளர்களை பாதுகாக்க வேண்டும்