×

பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டம்

பரமக்குடி,பிப்.23: பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வருவாய்த்துறை அலுவலர்களின் பணிச்சுமையினை கருத்தில் கொண்டு வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்.

பணியிறக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு பதவி உயர்விற்கான அரசாணையினை உடன் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையினை நிறைவேற்றி தர வேண்டும் என்பதை வலியுறுத்தி பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த அலுவலர்கள் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு, அலுவலகம் முன் அமர்ந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் அலுவலர்கள் இன்றி அனைத்து இருக்கைகளும் வெறிச்சோடி காணப்பட்டு பணிகள் முடங்கியதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்று வருகின்றனர்.

The post பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Paramakudi taluk ,Paramakkudy ,Paramakkudy District Collector's Office ,Old Benson ,
× RELATED “ஓ.பன்னீர்செல்வம் மிகவும்...