×
Saravana Stores

கல்வி சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதுகள் வழங்கும் விழா

 

திருத்துறைப்பூண்டி, பிப் .23: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் கல்வி சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதுகள் வழங்கும் முப்பெரும் விழா பெரியார் அம்பேத்கர் ஊரக குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு கல்வி அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்றது. திருவாரூர் வேலுடையார் கல்வி நிறுவனங்களின் தலைவர் தியாகபாரி தலைமையில், தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் விருதுகளை வழங்கி பேசினார்.

ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிரபாகரன் வரவேற்றார். கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, பூவுலகின் நண்பர்கள் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் ஆகியோர் பேசினார்.சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன், கோட்டூர் ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை முருகேசன், வழக்கறிஞர் அரசு தாயுமானவன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுஜாதா, நகர மன்றத் துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் நகர் மன்ற தலைவர் ஆர்.எஸ் பாண்டியன், முன்னாள் நகர வங்கி தலைவர் சண்முகசுந்தரம், முருகானந்தம், வர்த்தக சங்கத் தலைவர் செந்தில்குமார், எடையூர் மணிமாறன் வின்சென்ட் ஆரோக்கியராஜ், பால ஞானவேல், தேவதாஸ், முகில் ராஜேந்திரன், சந்திரஹாசன், தமிழ்வேலன் பள்ளங் கோயில் ராஜா,எஸ்ஜிஎம் லெனின், மருத்துவர் லெனின், நெடுஞ்சாலை துறை பொறியாளர் ரவி மற்றும் சமூக ஆர்வலர்கள் 100 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

கலந்து கொண்ட அனைவருக்கும் வாசிப்பை ஊக்கப்படுத்த 500 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டது. லெனின் பாபு ,பாலன், வெங்கடாச்சலம், விஜய் சங்கர், இளங்கோ,நடேச மகரந்தன்,கமல் பிரபாகரன், ஜெயராஜ் கார்த்திகேயன் ராஜ்மோகன், உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். முடிவில் சம்சுதீன் நன்றி கூறினார்.

The post கல்வி சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதுகள் வழங்கும் விழா appeared first on Dinakaran.

Tags : Education Environment Conservation Awards Ceremony ,Thiruthaurapoondi ,Triennial Education Environment Protection Awards Ceremony ,Periyar Ambedkar Rural Children and Women Development Education Trust ,Thiruthaurapoondi, Tiruvarur district ,Tiruvarur Veludayar Educational Institutions ,Education Environment Protection Awards Ceremony ,Dinakaran ,
× RELATED திருத்துறைப்பூண்டி பெரிய கோயிலில் வளர் பிறை பிரதோஷம் வழிபாடு