×

முத்துப்பேட்டையில் வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

 

முத்துப்பேட்டை, பிப். 23: முத்துப்பேட்டை தாசில்தார் அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு முடிவின்படி வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டங்களை அறிவித்தனர்.

அதன்படி கடந்த 13ம் தேதி முதல் கட்டமாக ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட மாவட்ட தலைநகரின் உண்ணாவிரதம் நடத்தினர் 2ம் கட்ட போராட்டமாக நேற்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க வட்ட தலைவர் கஜேந்திரன் தலைமை வகித்தார். தாசில்தார் குணசீலி முன்னிலை வகித்தார்.

இந்த காத்திருப்பு போராட்டத்தில் துணை தாசில்தார் மைதிலி, சங்க மாவட்ட இணைச்செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவிச்சந்திரன், வட்ட செயலாளர் பன்னீர் செல்வம், நிர்வாகிகள் வெங்கட்ராமன், கிருஷ்ணகுமார் உட்பட அலுவலகத்தில் உள்ள அனைத்து பணியாளர்களும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து கோஷமிட்டனர். மேலும் பணியில் ஈடுபடாமல் அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் நேற்று அன்றாடம் நடைபெறும் அனைத்து பணிகளும் முடங்கின.

The post முத்துப்பேட்டையில் வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Revenue ,Muthuppet ,Muthupet ,Tehsildar ,Tamil Nadu Revenue Officers Association ,Revenue Officers ,Central Executive Committee of Tamil Nadu Revenue Officers Association ,Muthupettai ,Dinakaran ,
× RELATED முத்துப்பேட்டை அருகே கலைத்திருவிழா...