×

அடையாள அட்டை வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

 

கும்பகோணம், பிப்.23: கும்பகோணம் பல்நோக்கு சமூக சேவை மைய வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. கும்பகோணம் பல்நோக்கு சமூக சேவை மைய வளாகத்தில், தஞ்சாவூர் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் மற்றும் கும்பகோணம் ரெட்கிராஸ் துணைத் தலைவர் ரொசாரியோ ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் எலும்பு முறிவு மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், மனநல மருத்துவர் கொண்ட குழுக்கள் மூலம் மருத்துவ பரிசோதனை செய்து அடையாள அட்டை வழங்கப்பட்டது. இம்முகாமில் 150க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் யுடிஐடி கார்டுகளுக்கான விண்ணப்பம் பெறப்பட்டது.

இம்முகாமில் கும்பகோணம் கிங்ஸ் ரோட்டரி சங்கத்தின் தலைவர் வினோத், ரோட்டரி உதவி ஆளுநர் சங்கரன், கும்பகோணம் ரெட்கிராஸ் உறுப்பினர்கள் சிவகுமார், ராமதாஸ், பாலசுப்ரமணி, மாற்றுத்திறனாளிகள் பள்ளி ஆசிரியர்கள், சங்க உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளி நலத்துறையினர் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post அடையாள அட்டை வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Kumbakonam Multipurpose Social Service Center ,Kumbakonam Multi-Purpose Social Service Center Complex ,Thanjavur District Handicapped Welfare Department ,Dinakaran ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...