×

பொதுவிநியோக திட்டத்திற்காக தஞ்சாவூரிலிருந்து சேலத்திற்கு 1250 டன் அரிசி அனுப்பிவைப்பு

 

தஞ்சாவூர், பிப். 23: தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 1250 டன் அரிசி பொது விநியோகத் திட்டத்திற்காக நேற்று சரக்கு ரயிலில் சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதுதவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். இதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1250 டன் அரிசி தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் தஞ்சாவூரில் இருந்து சேலத்திற்கு 1250 டன் அரிசி பொது விநியோகத் திட்டத்திற்காக 21 சரக்கு ரயிலின் வேகன்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.

The post பொதுவிநியோக திட்டத்திற்காக தஞ்சாவூரிலிருந்து சேலத்திற்கு 1250 டன் அரிசி அனுப்பிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Salem ,Thanjavur district ,Dinakaran ,
× RELATED வாக்கு பதிவான இயந்திரங்கள் பூட்டி...