×

கந்தர்வகோட்டை அருகே உலக சமூக நீதி தினம் கடைபிடிப்பு

 

கந்தர்வகோட்டை, பிப்.23: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சுந்தம்பட்டி, குளவாய்ப்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் உலக சமூக நீதி தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சித்ரா அனைவரையும் வரவேற்றார். கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா பேசியதாவது: உலக சமூக நீதி தினம் 1995ல், டென்மார்க்கின் கோபன்ஹேகனில் சமூக மேம்பாட்டிற்கான உலக உச்சி மாநாடு நடைபெற்றது, இதன் விளைவாக கோபன்ஹேகன் பிரகடனம் மற்றும் செயல்திட்டம் உருவானது.

உச்சிமாநாட்டில் 100க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் வறுமை மற்றும் முழு வேலைவாய்ப்பிற்கு எதிராக போராடுவதாக உறுதியளித்தனர். மேலும் அவர்கள் நிலையான, பாதுகாப்பான சமூகங்களுக்காக பாடுபடுவார்கள். வளர்ச்சித் திட்டங்களில் மக்களை மையமாக வைக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு பிறகு, மாநிலங்களின் உறுப்பினர்கள் கோபன்ஹேகனின் பிரகடனத்தையும், பிப்ரவரி 2005 இல் நியூயார்க்கில் சமூக மேம்பாட்டுக்கான செயல்திட்டத்தையும் மதிப்பாய்வு செய்தனர்.

சமூக வளர்ச்சியை எவ்வாறு முன்னெடுப்பது என்பதும் விவாதத்தின் முக்கிய அம்சமாகும். நவம்பர் 26, 2007 அன்று, ஐநா பொதுச் சபை பிப்ரவரி 20ஐ ஆண்டுதோறும் உலக சமூக நீதி தினமாக அறிவித்தது. 2009ல், இந்த நாள் முதலில் அனுசரிக்கப்பட்டது. சமூக நீதிக்கான உலக தினம் 2024 இடைவெளிகளை குறைத்தல், கூட்டணிகளை உருவாக்குதல்’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டது என்று பேசினார். நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் காஞ்சனா, புவனேஸ்வரி, மாலதி சுகன்யா, மருதம்பாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post கந்தர்வகோட்டை அருகே உலக சமூக நீதி தினம் கடைபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : World Social Justice Day ,Gandharvakot ,Kandarvakottai ,Pudukottai District ,Kandarvakottai Union Sundampatti ,Kulavaipatti ,Illamatti Education Center ,Chitra ,Coordinator ,Rahamadullah ,Gandharvakota Union House ,Gandharvakota ,
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...