×

புலியூர் பேரூராட்சி புரவிபாளையம் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

 

கரூர், பிப். 23: கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சிக்குட்பட்ட புரவிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த அறிவியல் கண்காட்சிக்கு பள்ளி தலைமையாசிரியை அமலி தலைமை வகித்தார். இதில், தாந்தோணி வட்டார கல்வி அலுவலர்கள் சகுந்தலா, கவுரி, கவுண்டம்பாளையம் பள்ளி தலைமையாசிரியர் பரணிதரன், எம்எஸ்சி கல்வியாளர் சதீஸ்குமார் மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

பள்ளி மாணவ, மாணவிகளின் சார்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த பகுதி பொதுமக்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டு பார்வையிட்டனர். தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் சேர்க்கைக்கு பெற்றோர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருவோம் என இந்த நிகழ்வில் உறுதி மொழியேற்று கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post புலியூர் பேரூராட்சி புரவிபாளையம் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Science Fair ,Puravipalayam ,Government ,School ,Puliyur Municipality ,Karur ,Puravipalayam Panchayat Union Primary School ,District ,Principal ,Amalie ,Dandoni Regional Education ,Sakundala ,Gowri ,
× RELATED கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணம்...