×
Saravana Stores

காயல்பட்டினத்தில் ஒரேநாளில் அடுத்தடுத்து 2 பைக்குகள் திருட்டு

ஆறுமுகநேரி,பிப்.23: காயல்பட்டினம் அலியார் தெருவைச் சேர்ந்த ராசிக் உசேனின் மகன் ஷேக் முகமது (31). சமையல் தொழிலாளியான இவர், தனது நெருங்கிய உறவினரான சாகுல் ஹமீது என்பவரது பைக்கை கடந்த 2 ஆண்டுகளாக தொழில் நிமித்தமாக பயன்படுத்தி வந்தார். கடந்த 20ம்தேதி இரவு வேலை முடித்துவிட்டு பைக்கை தனது வீட்டின் முன்புறம் நிறுத்திசென்றார். மறுநாள் (21ம் தேதி) காலை திரும்பிவந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. பைக் திருடுபோனது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: இதேபோல் காயல்பட்டினம் தேங்காய்பண்டகசாலை, மீனா காலனியை சேர்ந்த முகமது ஆதாமின் மகன் ஜாபர் சாதிக் (49). இவர் கடந்த 20ம் தேதி இரவு தனது வீட்டிற்கு முன்பு பைக்கை நிறுத்தி சென்றார். மறுநாள் (21ம் தேதி) காலை வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது தனது பைக் திருடுபோனது கண்டு பதறினார். பின்னர் இதுகுறித்து அவர் அளித்த புகார் குறித்து ஆறுமுகநேரி சிறப்பு எஸ்ஐ செல்லத்துரை வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் தலைமையில் எஸ்.ஐ.க்கள் சுகுமார், அரிகண்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காயல்பட்டினத்தில் ஒரேநாளில் அடுத்தடுத்து 2 பைக்குகள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Kayalpatnam ,Arumuganeri ,Sheikh Mohammad ,Rasiq Hussain ,Aliar Street, Kayalpattinam ,Sakul Hameed ,Kayalpattinam ,
× RELATED பழையகாயல் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது