×

திருப்பணிசெட்டிகுளத்தில் கால்நடை மருத்துவ முகாம்

ஏரல், பிப்.23: ஏரல் அருகேயுள்ள திருப்பணிசெட்டிகுளத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. தலைமை வகித்த திருப்பணிசெட்டிகுளம் பஞ். தலைவர் சுயம்புலிங்கம், சிறந்த கால்நடைகளுக்கும், சிறந்த கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கும் பரிசு வழங்கினார். இதையொட்டி செபத்தையாபுரம் கால்நடை உதவி மருத்துவர் வேல்மாணிக்கம் வள்ளி தலைமையிலான கால்நடை ஆய்வாளர்கள் சாந்தி, சுப்பிரமணியன், பராமரிப்பு உதவியாளர் பேச்சியம்மை கொண்ட மருத்துவக்குழுவினர் முகாமிற்கு அழைத்துவரப்பட்ட கால்நடைகளுக்கு பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். இதில் பஞ். செயலாளர் இந்துமதி மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள், ஊர் மக்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

The post திருப்பணிசெட்டிகுளத்தில் கால்நடை மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Camp ,Tirupanichettikulam ,Arel ,Animal Husbandry Department ,Tiruppanichettykulam ,Panj ,President ,Swayambulingam ,Sepathiyapuram… ,Veterinary Medical Camp ,
× RELATED பாஜக அரசு கட்டிக்கொடுத்த இலவச வீடுகள்...