மோகனூர், பிப்.23: மோகனூர் ஒன்றியம் கொமாரபாளையம் ஊராட்சியில், கடந்த 2 ஆண்டுகளாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து மோகனூர் பிடிஓ அலுவலகம் முன் நேற்று பயனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு கொமரபாளையம் ஊராட்சி தலைவர் சிலம்பரசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கொமாரபாளையம் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு உட்பட்ட வாய்க்கால், குளங்களில் மாகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தில் வேலை வழங்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இப்போராட்டத்ல் கொமரபாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.இதுகுறித்து மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ.) கீதா கூறுகையில், ‘கொமாரபாளையத்தில் பொதுப்பணித்துறைக்கு உட்பட்ட வாய்க்கால் பகுதியில், 100 நாள் வேலை வாய்ப்பு வழங்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் தெரிவித்துள்ளோம்’ என்றார்.
The post 100 நாள் வேலை கேட்டு பயனாளிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.