×

மாணவர்கள் செல்லும் வாகனங்கள் சோதனை 3 ஆட்டோக்கள், வேன் பறிமுதல்

வத்தலக்குண்டு, பிப். 23: வத்தலக்குண்டுவில் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிற்செல்லும் வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்தி, 3 ஆட்டோக்கள் மற்றும் வேனை பறிமுதல் செய்தனர். மதுரை வட்டார போக்குவரத்து இணை ஆணையர் சத்திய நாராயணன் உத்தரவின் பேரில், திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயகௌரி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஜாஸ்மின் மற்றும் அதிகாரிகள் நேற்று வத்தலக்குண்டு பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிற்செல்லும் வாகனங்கள் ெதாடர்பாக சோதனை பணிகளை மேற்கொண்டனர். அப்போது, உரிய தகுதிச்சான்று, அனுமதிச்சீட்டு, நடப்பு காப்பு சான்று புதுப்பிக்காத ஒரு பள்ளி வாகனம் மற்றும் 3 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுபோன்ற சோதனைகள் தொடரும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயகௌரி கூறினார்.

The post மாணவர்கள் செல்லும் வாகனங்கள் சோதனை 3 ஆட்டோக்கள், வேன் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Vatthalakundu ,Wattalakundu ,Madurai District Transport ,Joint Commissioner ,Sathya Narayanan ,Dindigul ,Dinakaran ,
× RELATED வத்தலக்குண்டு பள்ளிகள் முன்பு...