×

மனித – விலங்கு மோதல் தடுக்க சிறப்புப் படை: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: மனித – விலங்கு மோதலைத் தடுக்க சிறப்புப் படை அமைக்க அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஒரு மாதத்தில் யானை தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 152 பேர் யானைகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலையோரம் அமைந்துள்ள மாவட்டங்களில் மனித – விலங்குகள் மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வனத்துறையினர் வன விலங்குகள் ஊருக்குள் நுழைவதை கண்காணித்து காட்டுக்குள் மீண்டும் அனுபுவதற்கான தனிப்படைகளை அமைக்க வேண்டும்; விலங்குகளுக்கு தற்காலிக தண்ணீர் தொட்டிகளை திறக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளின் மூலம் தமிழ்நாட்டில் மனித – விலங்கு மோதல் நிகழாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post மனித – விலங்கு மோதல் தடுக்க சிறப்புப் படை: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : force ,Anbumani ,Chennai ,president ,BAMA ,Krishnagiri district ,Tamilnadu ,
× RELATED ராஜஸ்தான் அருகே இந்திய...