×

மாநில நெடுஞ்சாலைகள் ஆணைய சட்டம் உள்பட பேரவையில் ஒரே நாளில் 13 மசோதாக்கள் நிறைவேற்றம்

சட்டப்பேரவையில் 13 சட்ட மசோதாக்கள் நேற்று ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று பொது பட்ஜெட், வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் பேசினர். தொடர்ந்து பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 13 சட்ட மசோதாக்கள் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டன. அதாவது தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக பதிவாளர்களின் ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 60 ஆக உயர்த்துவது. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் போல் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் நிறுவப்படும். நெடுஞ்சாலைகளின் கட்டுமானம், மேம்பாடு, பராமரிப்பு மற்றும் மேலாண்மை ஆகியவற்றுக்காக இந்த ஆணையம் நிறுவப்படுகிறது. மலக்கசடுகள், கழிவுநீரை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், இழுவை வண்டிகள் அல்லது வேறு வண்டிகளின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதும், கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதும் அவசியமாகிறது. அதற்கேற்ற வகையில், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின், மலக்கசடு மற்றும் கழிவுநீர் மேலாண்மை பிரிவை திருத்துவதற்கான மசோதா உள்பட 13 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

The post மாநில நெடுஞ்சாலைகள் ஆணைய சட்டம் உள்பட பேரவையில் ஒரே நாளில் 13 மசோதாக்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Legislative Assembly ,Ministers ,Thangam Thannarasu ,MRK Panneer Selvam ,General Budget ,Budget ,Tamil Nadu Legislative Assembly ,
× RELATED நாடாளும‌ன்ற தேர்தல் முடிவுகள்...