×

ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு வள்ளுவர் கோட்டம் புனரமைப்பு பணிகள் விரைவில் முடியும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஆயிரம் விளக்கு தொகுதி டாக்டர் எழிலன் (திமுக), ‘‘சென்னை வள்ளுவர் கோட்டத்தை புனரமைக்கும் பணி எப்போது முடிவடையும்” என்று கேட்டார். இதற்கு பதிலளித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: ‘10 ஆண்டுகளாக வள்ளுவர் கோட்டம் பாழடைந்து இருந்தது. இந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் வள்ளுவர் கோட்டத்தை புனரமைக்க ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போதுள்ள தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கலையரங்கம், மாற்றுத்திறனாளிகள் நடைபாதை, உணவு கூடம், விற்பனை கூடம், மழை நீர் சேகரிப்பு வசதி, ஒலி ஒளி காட்சி கூடம், நுழைவாயில் புதுப்பிக்கும் பணி உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 30.6.2025க்குள் பணிகள் முடிக்க வேண்டும். ஆனால், முன்னதாகவே பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

The post ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு வள்ளுவர் கோட்டம் புனரமைப்பு பணிகள் விரைவில் முடியும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல் appeared first on Dinakaran.

Tags : Valluvar ,Minister ,AV Velu ,Dr. ,Ezhilan ,DMK ,Ayalar Lamnu Constituency ,Valluvar Sector ,Chennai ,Valluvar Kottam ,Dinakaran ,
× RELATED குமரியில் வள்ளுவர் சிலை- விவேகானந்தர்...