×

ரஞ்சி கோப்பை காலிறுதி தமிழ்நாடு-சவுராஷ்டிரா மோதல்

கோவை: ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இந்த ஆட்டங்களில் விதர்பா-கர்நாடகா, மும்பை-பரோடா, தமிழ் நாடு-சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம்-ஆந்திரா ஆகிய அணிகள் மோத உள்ளன. லீக் சுற்று டெஸ்ட் ஆட்டங்கள் தலா 4 நாட்கள் கொண்ட ஆட்டங்களாக நடந்த நிலையில் காலிறுதி, அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் தலா 5 நாட்கள் கொண்ட ஆட்டங்களாக நடைபெற உள்ளன. முதல் முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்ற சாய் கிஷோர் அணியை காலிறுதி வரை கொண்டு வந்துள்ளார்.

இதுவரை 12 முறை இறுதி ஆட்டத்தில் களம் கண்டுள்ள தமிழ்நாடு 2முறை மட்டுமே சாம்பியன் பட்டம் வென்றது. கடைசியாக 1987-88ம் ஆண்டுதான் ரஞ்சி கோப்பையை தமிழ்நாடு கைப்பற்றியது. அதன் பிறகு கோப்பை வறட்சி தீரவில்லை. அதுவும் 6 தொடர்களுக்கு பிறகு இந்தமுறைதான் தமிழ் நாடு காலிறுதிக்கு முன்னேறி உள்ளது. இந்த முறை வலுவான இளம் அணியான தமிழ்நாடு 3வது முறையாக கோப்பையை வெல்லும் நோக்கில் இன்று காலிறுதியில் களம் காண இருக்கிறது.

அதில் நடப்பு சாம்பியன் சவுராஷ்டிராவை எதிர்கொள்கிறது. இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5ஆட்டங்களில் 4 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன. ஒரு ஆட்டத்தில் தமிழ்நாடு வென்றுள்ளது. இன்று காலிறுதில் களம் காண உள்ள மும்பை, பரோடா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், தமிழ் நாடு ஆகியவை முன்னாள் சாம்பியன்கள். சவுராஷ்டிரா நடப்பு சாம்பியன். இவற்றில் ஆந்திரா மட்டுமே இதுவரை சாம்பியன் பட்டம் வெல்லாத ஒரே அணி.

* தமிழ்நாடு அணி:
சாய் கிஷோர்(கேப்டன்), பாபா இந்தரஜித், நாரயண் ஜெகதீசன், சுரேஷ் லோகேஷ்வர்(விக்கெட் கீப்பர்கள்), விஜய்சங்கர், பி.சச்சின், எஸ்.அஜித்ராம், முகமது அலி , டி.நடராஜன், திரிலோக் நாக், பிரதோஷ் பால், சந்தீப் வாரியர், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர்.

The post ரஞ்சி கோப்பை காலிறுதி தமிழ்நாடு-சவுராஷ்டிரா மோதல் appeared first on Dinakaran.

Tags : Ranji Cup Quarter Final ,Tamil Nadu ,Saurashtra ,Coimbatore ,Ranji Cup quarter ,Vidarbha ,Karnataka ,Mumbai ,Baroda ,Madhya Pradesh ,Andhra Pradesh ,Ranji Cup ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய...