×

மணிப்பூர் கலவரத்துக்கு வித்திட்ட சர்ச்சை உத்தரவை நீக்கியது உயர்நீதிமன்றம்

இம்பால்: மணிப்பூரில் கலவரத்துக்கு காரணமான நீதிமன்ற உத்தரவில் உள்ள குறிப்பிட்ட பத்தியை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம், மெய்தி பழங்குடியின பிரிவை பட்டியலின பிரிவில் சேர்ப்பதற்கு மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது மாநிலத்தில் கலவரத்துக்கு வித்திட்டது. இதனால் குக்கி பழங்குடிகள் மற்றும் மெய்தி இன மக்களுக்கு இடையே கடும் மோதல் வெடித்தது. ஆங்காங்கே வன்முறைகளும், கலவரங்களும் வெடித்தது.

கடந்த ஆண்டு மே முதல் அங்கு அமைதியற்ற சூழல் நிலவி வருகின்றது. சுமார் 200 உயிர்கள் பலியாயின. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.  இந்நிலையில் மெய்தி இனத்தவரை பட்டியலினத்தில் சேர்ககும் உத்தரவை மணிப்பூர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கோல்மெய் காய்புல்ஷில்லுவின் ஒற்றை அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு சாசன அமர்வின் நிலைபாட்டுடன் முரண்படுவதால் கடந்த ஆண்டு மார்ச் தீர்ப்பில் இருந்த குறிப்பிட்ட பத்தியை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post மணிப்பூர் கலவரத்துக்கு வித்திட்ட சர்ச்சை உத்தரவை நீக்கியது உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : High Court ,Manipur ,Imphal ,
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...