×
Saravana Stores

கியூட் இளங்கலை தேர்வு முறையில் மாற்றம்

புதுடெல்லி: கியூட் இளங்கலை தேர்வு முறையை மறுசீரமைப்பு குறித்து தேசிய தேர்வு முகமை பரிசீலித்து வருகின்றது. நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புக்களில் சேர்வதற்கு கியூட் பொது தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கியூட் தேர்வு முறையை மறுசீரமைப்பதற்கு தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜெகதீஷ் குமார் கூறுகையில்,‘‘ஓஎம்ஆர் முறையில் அதிக பதிவு செய்தலோடு கூடிய தேர்வு தாள்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தேசிய தேர்வு முகமை ஆய்வு செய்து வருகின்றது. இதன் மூலமாக அதிக எண்ணிக்கையிலான பள்ளிகளை தேர்வு மையங்களாக தேர்வு செய்ய முடியும்.

மாணவர்கள் தங்களது நகரங்களுக்குள்ளேயே தேர்வு மையத்தை பெறுவதையும் உறுதி செய்யலாம். தேர்வு மையத்துக்கு தொலைதூரம் செல்ல வேண்டிய அவசியமில்லை. மேலும் 10 தாள்களுக்கு பதிலாக இந்த ஆண்டு மாணவர்கள் அதிகபட்சம் ஆறு தாள்கள் மட்டுமே எழுதுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.” என்றார்.

The post கியூட் இளங்கலை தேர்வு முறையில் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,National Examinations Agency ,CUET ,CUT ,Dinakaran ,
× RELATED கேள்வித்தாள் வெளியானதால் மாற்றப்பட்ட...