×

மாணவிகள் தந்த பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காமல் கலாஷேத்ரா கொடும் பழிக்கு உள்ளாகியுள்ளது: உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை: மாணவிகள் தந்த பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காமல் கலாஷேத்ரா கொடும் பழிக்கு உள்ளாகியுள்ளது என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மாணவிகள் அளித்த புகார் குறித்து விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் அளித்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட ஒய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான விசாரணை குழுவில் அறக்கட்டளை இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் பெயர் இடம்பெற கூடாது எனவும் அந்த குழுவின் மாணவிகளின் பிரதிநிதிகள், பெற்றோரின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்லூரி மாணவிகள் 7 பேர் தனித்தனியே வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கலாஷேத்ரா கல்வி நிறுவனத்திற்கு பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை தடுப்பு சட்டம், போக்சோ சட்டம் உள்ளிட்ட சட்ட விதிகளின் அடிப்படையில் பாலியல் தொல்லைகளை தடுக்க விரிவான கொள்கை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வலக்கை விசாரித்த நீதிபதி இறுதி உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் கலாஷேத்ரா அறக்கட்டளை மீது மாணவிகள் அளித்த புகார் மிகவும் கவலைக்குரியது என குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி, சுமற்றப்பட்ட குற்றச்சாட்டின் தன்மை குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார். புகாருக்குள்ளாக்கப்பட்ட பேராசிரியர் நீக்கப்பட வேண்டும் எனவும் மாணவிகள் அளித்த புகாரின் மீது விரைவான நடவடிக்கை எடுக்காதது கொடும் பழிக்கு உள்ளாக்கியுள்ளது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post மாணவிகள் தந்த பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காமல் கலாஷேத்ரா கொடும் பழிக்கு உள்ளாகியுள்ளது: உயர்நீதிமன்றம் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Kalashetra ,Chennai ,High Court ,Kannan ,Court ,Dinakaran ,
× RELATED தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி...