×

தண்ணிக் குழம்பு

தேவையானவை:

துவரம்பருப்பு – கால் கப்,
பாசிப்பருப்பு – அரை கப்,
புளி – சிறிய எலுமிச்சையளவு,
வெங்காயம், தக்காளி – தலா ஒன்று,
உப்பு தேவையான அளவு.

பொடி செய்ய:

காய்ந்த மிளகாய் – 4,
தனியா – 2 டேபிள்ஸ்பூன்,
சோம்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்.

தாளிக்க:

எண்ணெய் – சிறிதளவு,
பட்டை – சிறிய துண்டு,
காய்ந்த மிளகாய் – 4,
பூண்டு – 4 பல்,
கடுகு,
உளுத்தம்பருப்பு,
சோம்பு – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

பொடி செய்யக் கொடுத்துள்ளவற்றை வறுத்து அரைக்கவும். பாசிப் பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும். துவரம்பருப்பை நிறைய தண்ணீர் விட்டு வேகவைத்து கரைத்துக் கொள்ளவும். இதில் பாசிப்பருப்பை சேர்த்து வேகவிடவும். குழைய வெந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, வறுத்து அரைத்த பொடி, உப்பு, புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். மற்றொரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, சோம்பு, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு ஆகியவற்றை தாளித்து, குழம்பில் சேர்த்து இறக்கவும்.

The post தண்ணிக் குழம்பு appeared first on Dinakaran.

Tags : Tannik Kulambu ,
× RELATED பள்ளிபாளையம் காளான் பிரை